புவி வெப்பமயமாதலை கண்காணிக்க நாசாவின் புதிய திட்டம்

Date:

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா பூமி வெப்பமயமாதல் குறித்தான ஆராய்ச்சிகளை முடுக்கி விட்டுள்ளது.

உலகின் பனிக்கட்டி கண்டங்களான ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகாவில் தனது சோதனை மையங்களை நிறுவி வெப்ப இழப்பு குறித்து கண்காணித்து வருகிறது.

இந்த நிலையில் அதனின் மேம்பட்ட நடவடிக்கையாக துருவ பிரதேசங்கள் மேல் செயற்கைகோள்கள் ஏவி துல்லிய கணிப்புகளை பெறவுள்ளது.

இதற்காக தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ரொக்கெட் லேப் உடன் இணைந்து இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளவுள்ளது.

ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகாவில் இருந்து புவி எந்த அளவு தனது வெப்பத்தை இழக்கிறது என்பதற்கான புரிதலுக்கு இது உதவ இருக்கிறது.

இதற்காக 2 கியூப்சாட் வகை செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துகிறது.

இதனால் கடல் பனி இழப்பு, பனிக்கட்டி உருகுதல் மற்றும் கடல் மட்ட உயர்வு ஆகியவை குறித்து தெளிவான கணிப்புகளும், காலநிலை மாற்றம் குறித்தும் அறிய உள்ளதாக நாசா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....