ஜார்கண்ட் ஆளுநரை சந்தித்த ரஜினி.. காரணம் இதுதான்

Date:

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ‘ஜெயிலர்’ படத்தின் ரிலீஸுக்கு முன்பே இமயமலைக்கு சென்ற நடிக ரஜினி ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்று சாமியார்களை சந்தித்தார். அங்குள்ள தயானந்த சரஸ்வதி சாமிகள் சிலைக்கு மாலை அணிவித்து பூஜை செய்தார்.

சாமியார்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். இதை தொடர்ந்து பத்ரிநாத் கோவிலுக்கு சென்று ரஜினி வழிபட்டார். இவரின் இமயமலை பயணம் நேற்றுடன் முடிவடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகர் ரஜினி, ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாக கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....