ஹோமாகம தொழிற்சாலை தீப்பரவல் குறித்து வெளியான திடுக்கிடும் உண்மைகள்

Date:

ஹோமாகம கைத்தொழில் பேட்டையில் உள்ள இரசாயன தொழிற்சாலையில் தீப்பிடித்த களஞ்சியசாலை ஒன்றுக்கு தேவையான சுற்றாடல் அனுமதி பெறப்படவில்லை என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் வீரசுந்தர தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால், அப்பகுதியின் வளிமண்டலத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால், தொழிற்சாலைக்கு அருகில் வசிக்கும் மக்கள் முகக்கவசம் அணியுமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.

தீயில் இரசாயனம் கலந்ததால், தொழிற்சாலையை சுற்றியுள்ள மின் கம்பிகள் மற்றும் சுவர்களில் இரசாயன கழிவுகள் படர்ந்திருப்பதையும், மின்சாரசபை ஊழியர்கள் கம்பிகளில் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டதையும் பார்க்க முடிந்தது.

தீ பரவலுக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், தீயை கட்டுப்படுத்த ஹொரணை நகரசபை, தெஹிவளை மற்றும் கோட்டே மாநகரசபையின் சுமார் பத்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன.

தீயினால் தொழிற்சாலைக்கு ஏற்பட்ட நஷ்டம் இதுவரை கணக்கிடப்படவில்லை எனவும், தீ விபத்துக்குள்ளான தொழிற்சாலையைச் சுற்றியுள்ள நான்கு தொழிற்சாலைகளுக்கும் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....