மது போதையில் பாடசாலைக்கு வந்த மாணவி – நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

Date:

கெக்கிறாவ கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலையொன்றில் 14 வயதுடைய சிறுமி ஒருவர் மது அருந்திவிட்டு பாடசாலைக்கு சமுகமளித்த சம்பவம் தொடர்பில், ஏதேனும் ஒருவர் அவரை மதுவுக்கு அடிமையாக்கி விட்டாரா? அல்லது, அவருக்கு பலவந்தமாக மது வழங்க எவரேனும் முற்பட்டுள்ளாரா என ஆராய்ந்து அறிக்கையிடுமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவ்வாறு இருப்பின், அது தொடர்பான சந்தேகநபரை கைது செய்யுமாறும் கெக்கிறாவ நீதவான் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்துடன், குறித்த சிறுமி தொடர்பில், விசேட சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் பணித்துள்ளார்.

கெக்கிறாவ கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலையொன்றில் கல்வி பயிலும் 14 வயது சிறுமி ஒருவர் அண்மையில் மது அருந்தி விட்டு பாடசாலைக்கு சமுகமளித்திருந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் நீதிமன்றுக்கு அறியப்படுத்தப்பட்டது.

இந்தநிலையில், அவர் பயிலும் பாடசாலைக்கு முன்பாக போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள், மதுபானம் அருந்தி விட்டு குறித்த சிறுமி பாடசாலைக்கு சமுகமளித்துள்ளதை கண்டறிந்திருந்தனர்.

இவ்வாறான பின்னணியில், குறித்த சிறுமியின் தாத்தாவினால் அவர் மதுபானம் அருந்துவதற்கு பழக்கப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....