மாநகர சபையின் முன்னாள் தவிசாளரின் வீட்டுக்கு நிர்வாணமாக சென்ற நபரால் பரபரப்பு

Date:

ஹொரணை மாநகர சபையின் முன்னாள் தவிசாளர் விதானகே சிறிசோமவின் வீட்டிற்கு இரும்பு கம்பியுடன் மதுபோதையில் நிர்வாணமாக சென்ற நபர் ஒருவர் குறித்த வீட்டுக்கு சேதம் விளைவித்துள்ளதாக தெரிவிக்கிப்பட்டுள்ளது.

 

நேற்று (20) இரவு 7 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இதனால் முன்னாள் தவிசாளரின் மகள் மற்றும் சகோதரியும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

 

மேலும், வீட்டில் இருந்த பல பொருட்களுக்கும், வாயிற்கதவிற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தாக்குவதற்காக சென்ற நபர் வீட்டில் இருந்த வளர்ப்பு நாயையும் கொடூரமாக தாக்கியதாக வீட்டு உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

 

தாக்குதல் நடத்த வந்த நபர், முன்னாள் தவிசாளரால் மாநகர சபையில் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், அங்கு இடம்பெற்ற சம்பவமொன்றுக்கு பழிவாங்கும் நோக்கில் அவர் இவ்வாறு நடந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குறித்த நபர் வீதியில் நிர்வாணமாக நடந்து செல்வதை நபர் ஒருவர் கையடக்கத் தொலைபேசியில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

 

சம்பவத்தையடுத்து உடனடியாக ஹொரணை பொலிஸார் சந்தேக நபரை கைதுசெய்துள்ளதுடன், அவர் இன்று (21) ஹொரணை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....