சாக்லேட் பையனாக நடித்து போரடித்து விட்டது- துல்கர் சல்மான்

Date:

அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து வருகிற 24-ந் தேதி வெளியாக உள்ள படம் கிங் ஆப் கோதா. படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, சபீர், செம்போன் வினோத், சாந்தி கிருஷ்ணா, அனிகா சுரேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் விழா அடையாறில் நடந்தது.

விழாவில் பங்கேற்ற துல்கர் சல்மான் கூறியதாவது:- கிங் ஆப் கோதா ஆக்ஷன் நிறைந்த படம். எனக்கு ஒரே மாதிரியாக படம் நடித்து போரடித்து விட்டது. ரொமான்ஸ் ஆகவும் சாக்லேட் பையனாகவும் ஏராளமான படங்கள் நடித்து விட்டேன். ரசிகர்களுக்கே சலிப்பை உண்டாக்கும். இந்தப் படம் ஆக்ஷன் படமாக எனக்கு அமைந்துள்ளது.

ஒவ்வொரு படத்திலும் வேறு விதமான கதைகளை தேடி நடித்துக் கொண்டிருக்கின்றேன். இனி எனது ஒவ்வொரு படமும் வித்தியாசமாக இருக்கும். உதாரணமாக “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படம் ரொமான்ஸ் திரில்லர் கலந்த கதை. வெற்றி பெற்ற படங்களை ரீமேக் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. அப்பாவின் எந்த படத்தின் ரீமேக்கிலும் நான் நடிக்க மாட்டேன்.

படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கதாபாத்திரம் சிறியதாக இருந்தாலும் அந்த பாத்திரம் பேசப்படும். இப்போது எனக்கு பிடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி தான் என்று கூறினார். இதைத்தொடர்ந்து மனித நேயம் உள்ள கதாநாயகனாக துல்கர் சல்மானை பிடிக்கும் என்று ஐஸ்வர்யா லட்சுமி பதில் அளித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....