கைக்குழந்தையுடன் குளத்தில் குதித்த தாய்

Date:

தாய் ஒருவர் தனது ஒரு வயது மகளுடன் குளத்தில்  குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லோகி தோட்டத்தில் வசித்து வந்த 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயும் அவரது ஒரு வயது மகளுமே இவ்வாறு உயிரிழந்தனர்.

உயிரிழந்த பெண், தானும் குழந்தையும், தனது கணவர் மற்றும் கணவரின் குடும்ப உறுப்பினர்களால் துன்புறுத்தப்படுவதாக மூன்று பக்க கடிதம் எழுதியுள்ளார்.

குறித்த கடிதம், திருமணச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை தனது வீட்டிற்கு அருகில் உள்ள குளத்தின் அருகே வைத்துவிட்டு இன்று (23) காலை தனது சிறு குழந்தையுடன் குளத்தில் குதித்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

குளத்தில் தாயின் சடலம் மிதப்பதாகவும், குழந்தையின் சடலம் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....