நிர்வாண வீடியோ எடுத்து விற்பனை செய்ததாக நடிகை ராக்கி சாவந்த்

Date:

பிரபல இந்தி கவர்ச்சி நடிகையான ராக்கி சாவந்த் இங்கிலாந்தை சேர்ந்த தொழில் அதிபர் ரித்தேஷை திருமணம் செய்து பிரிந்தார். பின்னர் ஆதில் கான் துரானி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் ஆன ஒரு மாதத்திலேயே ஆதில் கான் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், தனது பணத்தை எடுத்துக்கொண்டதாகவும் மும்பை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆதில் கானை கைது செய்தனர்.

ராக்கி சாவந்த் கொடுத்த புகாரின் காரணமாக, மைசூர் சிறையில் அடைக்கப்பட்ட ஆதில் கான், சில நாட்களுக்கு முன்பு ஜாமீன் பெற்று வெளியே வந்தார். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆதில் கான் துரானி, தனது முன்னாள் மனைவி ராக்கி சாவந்த் மீது அடுக்கடுக்கான பல புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

“ராக்கி என்னிடம் பொய் சொன்னார். ராக்கி சாவந்த் முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக என்னிடம் கூறிவிட்டு தொடர்ந்து ராக்கியும் ரித்தேசும் தொடர்பில் இருந்தார்கள். நான் அவரை தாக்கியதாக ராக்கி கூறுகிறார். ஆனால் அவர் தான் என்னை பல முறை தாக்கியுள்ளார். எனக்கு போதை மருந்து கொடுத்து நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டி வருகிறார். என்னுடைய பெயரை கெடுக்கவும், என்னை ஓரினச்சேர்க்கையாளர் என்று முத்திரை குத்தவும் அவர் முயற்சி செய்து வருகிறார்” என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இவர் கூறியுள்ள இந்த தகவல் பாலிவுட் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஆதிலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேட்டி அளித்துள்ள ராக்கி சாவந்த் கூறியதாவது

ஆதில் எனது நிர்வாண வீடியோக்களை துபாயில் ரூ.47 லட்சத்திற்கு விற்பனை செய்து உள்ளார். நான் குளியலறையில் இருந்தபோது அதனை வீடியோ எடுத்து உள்ளார். என் முழு நிர்வாண கோலத்தையும் வீடியோ எடுத்து உள்ளார். நான் அமைதியாக இருந்தேன். அவர் என்னை வீட்டில் வைத்து பலாத்காரம் செய்தார்.

என் முகத்தை எப்படி உலகுக்குக் காட்டுவது?. நான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள வேண்டுமா? முழு உலகமும் என் நிர்வாணத்தைப் பார்த்தால் நான் எங்கு செல்வேன்? என கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....