நடிகர் விஷ்ணு மஞ்சுவின் கனவு திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது

Date:

படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான வேடங்களில் நடிக்கிறார்கள். மிகப்பெரிய பொருட் செலவில் பிரமாண்டமான காவியமாக உருவாக இருக்கும் படத்தில் கண்ணப்பா வேடத்தில் விஷ்ணு மஞ்சு நடிக்கிறார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஷ்ணு மஞ்சுவின் நீண்டநாள் கனவான ‘கண்ணப்பா – ஒரு உண்மையான இந்திய காவியக் கதை’ திரைப்படம் இன்று ஸ்ரீ காளஹஸ்திரி கோவிலில் பூஜையுடன் தொடங்கியது.

சிவபெருமானின் அசைக்க முடியாத பக்தரான கண்ணப்பாவின் காலத்தால் அழியாத சரித்திரம் மற்றும் பக்தியை பிரமாண்டமான திரைக்காவியமாக மக்களுக்கு கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட நடிகர் விஷ்ணு மஞ்சு, இதற்காக கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

கண்ணப்பாவின் வாழ்க்கை மற்றும் அவருடைய பக்தியின் மகிமை குறித்து பல ஆச்சரியமான மற்றும் அதிசய தகவல்களை சேகரித்தவர், அவற்றைக் கொண்டு பிரமாண்டமான பான் இந்திய திரைப்படத்தை கொடுப்பதற்கான வேலையை தொடங்கியுள்ளார். 24 ஃபிரேம்ஸ் ஃபேக்டரி மற்றும் ஏவிஏ என்டர்டெயின்மென்ட் சார்பில் டாக்டர்.

மோகன் பாபு தயாரிப்பில் மிகப்பெரிய பொருட் செலவில் பிரமாண்டமான காவியமாக உருவாக இருக்கும் இப்படத்தில் கண்ணப்பா வேடத்தில் விஷ்ணு மஞ்சு நடிக்கிறார். கதையின் நாயகியாக நுபுர் சனோன் நடிக்கிறார். இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான வேடங்களில் நடிக்கிறார்கள்.

பிரபல எழுத்தாளர்கள் பருச்சுரிகோபாலகிருஷ்ணா, தோட்டா பிரசாத், தோட்டப்பள்ளி சாய்நாத், புர்ரா சாய் மாதவ் ஆகியோர் இப்படத்தின் கதையை எழுதியுள்ளனர். மணிசர்மா மற்றும் ஸ்டீபன் தேவஸ்ஸே இசையமைக்கின்றனர். ஷெல்டன் ஷா ஒளிப்பதிவு செய்ய, சின்னா கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

‘மஹாபாரதம்’ தொடரை இயக்கிய முகேஷ் சிங் ‘கண்ணப்பா – ஒரு உண்மையான இந்திய காவியக் கதை’ திரைப்படத்தை இயக்குகிறார். இந்திய சினிமாவின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் மட்டும் இன்றி ஹாலிவுட் சினிமாவின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும் பணியாற்றும் இப்படம் இந்திய சினிமாவின் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக மட்டும் இன்றி உலக மக்களையும் கவரும் வகையில் பிரமாண்டமான படைப்பாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....