வெற்றி பாதையில் இந்தியாவின் சந்திரயான் 3: நிலவில் கால்பதித்த பிரக்யான் ரோவர்

Date:

சந்திரயான் 3-யின் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி உள்ளது.

இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் துருவ பகுதியில் இந்திய நேரப்படி மாலை 6.04 மணியளவில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.

சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 14ம் திகதி சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து ஏவப்பட்டது.

 

நிலவின் தென் துருவப் பகுதியில் முதல் நாடாக இந்தியா தனது சந்திரயான் 3 விக்ரம் லேண்டரை வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.

சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கிய பிறகு, நிலவின் மேற்பரப்பில் எழுந்த தூசி துகள்கள் அடங்கிய பிறகே விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வரும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, தரையிறங்கி கிட்டத்தட்ட 4 மணி நேரத்திற்கு பிறகு தற்போது விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெற்றிகரமான நிலவின் மேற்பரப்பில் இறங்கியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....