இன்ஸ்டன்ட் வைரல் ஆன 2-வது சிங்கில்.. மார்க் ஆண்டனி படத்தின் ஐ லவ் யு டி பாடல் வெளியானது!

Date:

திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஷால் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி இருக்கிறது. மார்க் ஆண்டனி படத்தின் இரண்டாவது பாடல், “ஐ லவ் யு டி” வெளியிடப்பட்டது. இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....