Meningococcal குறித்து தொற்றுநோயியல் பிரிவின் அறிவித்தல்

Date:

Meningococcal – Meningitis பற்றீரியா குறித்து மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் இவ்வாறான பல நோயாளிகள் பதிவாகுவதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் நிபுணர் சமித்த கினிகே தெரிவித்தார்.

காலி சிறைச்சாலையில் கைதிகள் குழுவொன்று திடீரென சுகவீனமடைந்த நிலையில், அவர்கள் Meningococcal – Meningitis நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எனினும் இந்நோய் பரவுவது தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என வைத்திய நிபுணர் சமித்த கினிகே சுட்டிக்காட்டியுள்ளார்.

“ஒவ்வொரு வருடமும் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட சிலர் பதிவாகின்றனர். இது கண்டறியப்படாத நோயல்ல. இது தொற்று மூலம் பரவும் நோயாகும். இதனால் சமூகத்தில் எந்தப் பாதிப்பும் இல்லை.

முதலில் அடையாளம் காணப்பட்ட இரண்டு நோயாளிகள் மட்டுமே இதுவரை பதிவாகியுள்ளனர். இந்த வகையான நோய் தொற்றாளர்கள் மூலம் பரவக்கூடியது” என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....