பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நிறைவுகாண் மருத்துவ தொழிற்சங்கவியலாளர்களின் கூட்டு ஒன்றியம் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக வைத்தியசாலையில் மருத்துவ நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளன.
அத்துடன், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளுக்கு பிரவேசித்த நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த பணிப்புறக்கணிப்பிற்கு கதிரியக்க நிபுணர்கள்;, ஆய்வுகூட வல்லுனர்கள், ஒளடதவியலாளர்கள் உள்ளிட்ட பல துறையைச் சார்ந்தவர்கள் ஆதரவளித்துள்ளனர்.




