2 நாட்களாக தொடர் தாக்குதல் இலங்கை கடல் கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு

Date:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆற்காட்டு துறை, வெள்ளப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 21,22 -ம் திகதியில் கோடியக்கரைக்கு தென்கிழக்கு மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடல் கொள்ளையர்கள் தமிழ்நாடு மீனவர்களை வழிமறித்து கத்தி, இரும்பு கம்பியால் தாக்கி மீன்பிடி வலைகள், மீன்கள், மற்றும் மீன்பிடி பொருட்களை கொள்ளையடித்து கொண்டு மீனவர்களை விரட்டி அடித்து சென்று விட்டனர்.

தாக்குதலில் காயமடைந்த ஆற்காடுதுறை, வெள்ளபள்ளம் மீனவர்கள் 15 பேர் நாகை மற்றும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 11 படகு மற்றும் அடையாளம் தெரியாத 46 இலங்கை கடல் கொள்ளையர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

வேதாரண்யம் மீனவர்கள் மீது கடந்த 2 நாட்களாக தாக்குதல் நடத்தி ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்த நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....