திருகோணமலை காவல்துறையால் தடுப்பில் இருந்த போது உயிரை மாய்த்துக்கொண்டதாக கூறப்படும் சம்பவத்துக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை – ஜமாலியா தக்வாநகர் பகுதியை சேர்ந்த ஒருவர் திருட்டு சம்பவம் தொடர்பில் கைதானார்.
கைதானவர் திருகோணமலை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், அவர் உயிரை மாய்த்துக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பல்லேகலை வெளிக்கள சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 34 வயதான கைதி ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டார்.
உயிரை மாய்த்துக்கொண்டவர் மட்டக்குளி – சமன்குள பகுதியை சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.




