திருச்சி வந்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

Date:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது வெளி மாவட்டங்களுக்கு அரசு முறை பயணங்களை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களுக்கு சென்று வந்தார்.

அங்கு நடந்த அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இந்த நிலையில் 4 நாள் பயணமாக திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் இல்ல விசேஷங்களில் கலந்து கொள்கிறார்

இந்த நிலையில் மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் இன்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார்.

அவருக்கு தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....