ஐசிசி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு…!!

Date:

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது. இதில் ஒருநாள் போட்டிகளின் பேட்ஸ்மேன் தரவரிசையில் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதல் இடத்தில் உள்ளார். 3-வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் வீரர் பகார் ஜமான் 2 இடங்கள் பின் தங்கி 5-வது இடத்திற்கு சரிந்துள்ளார். 5-வது இடத்தில் இருந்த சுப்மன்கில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதனை தொடர்ந்து இந்திய அணி தரப்பில் 9-வது இடத்தில் விராட் கோலியும் 11-வது இடத்தில் ரோகித் சர்மாவும் நீடிக்கின்றனர்.

ஒருநாள் போட்டிகளின் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஹேசில்வுட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் முதல் 2 இடங்களில் நீடிக்கின்றனர். 6-வது இடத்தில் இருந்த ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் உர் ரகுமான் கிடுகிடுவென முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 5-வது இடமும் குல்தீப் யாதவ் 10-வது இடத்திலும் உள்ளனர்.

டி20 போட்டிகளை பொறுத்தவரை பேட்டிங் மற்றும் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ஒரே ஒரு இந்தியர் மட்டுமே டாப் 10-ல் இடம் பிடித்துள்ளார். பேட்டிங் தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் நம்பர் 1 இடத்தில் நீடிக்கிறார். ஆல்ரவுண்டர் தரவரிசையில் ஹர்திக் பாண்ட்யா 2-வது இடத்தில் நீடிக்கிறார். அயர்லாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் அரைசதம் விளாசியதன் மூலம் ருதுராஜ் கெய்க்வாட் 143 இடங்கள் முன்னேறி 87-வது இடத்தை பிடித்துள்ளார். பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் யாரும் முதல் 10 இடங்களுக்குள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....