2-வது ஒருநாள் போட்டி; டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு

Date:

சிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் மோதுகிறது. இப்போட்டிகள் இலங்கையில் நடைபெறுகின்றன. இந்த தொடரின் முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

அதில் பாகிஸ்தான் நிர்ணயித்த 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணி 59 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 142 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றியை ருசித்தது. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவுப் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. அதற்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்களுடன் விளையாடி வருகிறது.

ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரியாஸ் ஹசன், ஹஷ்மத்துல்லா ஷாஹிதி(கேப்டன்), இக்ரம் அலிகில், முகமது நபி, ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், பசல்ஹாக் பரூக்கி, அப்துல் ரஹ்மான், ஷாஹிதுல்லா கமால்

பாகிஸ்தான் : பக்கர் ஜமான், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம்(கேப்டன்), முகமது ரிஸ்வான், ஆகா சல்மான், இப்திகார் அகமது, ஷதாப் கான், உசாமா மிர், ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....