தேசிய திரைப்பட விருது சிறந்த நடிகர் அல்லு அர்ஜூன் சிறந்த நடிகைகள் அலியா பட், கீர்த்தி சனோன்

Date:

69-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. மத்திய மந்திரி அனுராக் தாகூர் தேசிய திரைப்பட விருதுகள் பெற்றவர்கள் விவரத்தை அறிவித்தார்.

தாதாசாகேப் பால்கே விருது இன்று அறிவிக்கப்படாது. அது பின்னர் அறிவிக்கப்படும்.

திரைப்பட விருதுகள் பெற்றவர்கள் விவரம் வருமாறு:-

சிறந்த நடிகைக்கான விருதை முறையே ‘கங்குபாய் கத்தியவாடி’ மற்றும் ‘மிமி’ படத்திற்காக ஆலியா பட் மற்றும் கீர்த்தி சனோன் பகிர்ந்து கொண்டனர்.

‘புஷ்பா: தி ரைஸ்’ படத்திற்காக அல்லு அர்ஜுன் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.

பி.லெனின் இயக்கிய ‘சிற்பிகளின் சிற்பங்கள்’ சிறந்த கல்வி திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது.

‘காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்தில் நடித்த பல்லவி ஜோஷிக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘கொமுரம் பீமுடோ’ பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகருக்கான விருதை கால பைரவா வென்றார்

தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருதை காஷ்மீர் பைல்ஸ் வென்றுள்ளது.

‘ஷெர்ஷா’ திரைப்படம் சிறப்பு ஜூரி விருதை வென்றது.

மணிகண்டன் இயக்கிய ‘கடைசி விவசாயி’ படத்தில் நடித்த மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

சிறந்த தமிழ்படம் – ‘கடைசி விவசாயி’ (மணிகண்டன்)

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....