9 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளா்.
பாணந்துறை பகுதியை சேர்ந்த 60 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டியுடன் தொடர்பை பேணிய ஒருவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.




