ஆதரவற்ற முதியவர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் விஷால்

Date:

செல்லமே படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் விஷால். அதன்பின்னர் சண்டக்கோழி, திமிரு, சத்யம், அவன் இவன், தாமிரபரணி, துப்பறிவாளன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதையடுத்து நடிகர் விஷால் இன்று தனது 45-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஷால் தனது பிறந்த நாளை ஆதரவற்ற முதியோர்களுடன் கொண்டாடியுள்ளார்.

பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், “பெரியவர்கள் வாழ்த்தும் போது கடவுள் நேரில் வந்து வாழ்த்துவது போன்று இருக்கிறது. எங்கள் அறக்கட்டளை சார்பாக முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்து வருகிறோம்” என்று பேசினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....