ஸ்போர்ட்ஸ் தீம் மற்றும் ஏராள வசதிகள்.. புதிய 2 சீரிஸ் மாடலுக்கான முன்பதிவு துவங்கிய பி.எம்.டபிள்யூ.!

Date:

பி.எம்.டபிள்யூ. இந்தியா நிறுவனம் தனது 220i எம் பெர்ஃபார்மன்ஸ் எடிஷன் மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. புதிய பி.எம்.டபிள்யூ. கார் இந்தியாவில் செப்டம்பர் 7-ம் திகதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய பி.எம்.டபிள்யூ. கார் பிளாக் சஃபையர் மெட்டாலிக் நிறத்தில் கிடைக்கிறது.

இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனை செய்யப்பட இருக்கிறது. முன்பதிவு பி.எம்.டபிள்யூ. ஆன்லைன் தளத்தில் நடைபெறுகிறது.

புதிய 2 சீரிஸ் கிரான் கூப் எம் பெர்ஃபார்மன்ஸ் மாடலில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 7 ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜினுடன் வழங்கப்படும் மோட்டார் 173 ஹெச்.பி. பவர், 280 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

 

இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 7.1 நொடிகளில் எட்டிவிடும். தோற்றத்தை பொருத்தவரை இதன் வெளிப்புறம் எம் மாடல்களில் வழக்கமாக வழங்கப்படும் விசேஷ டிசைன் கொண்ட முன்புற கிரில், அல்கான்ட்ரா லெதர் கவர் கொண்ட கியர் செலக்டர் மற்றும் எம் பெர்ஃபார்மன்ஸ் பாகங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....