நயன்தாராவின் அதிரடி முடிவு ; இதனை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள்

Date:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா சினிமா விழாக்களில் கலந்து கொள்வதை அதிகம் தவிர்ப்பவர். அவர் நடிக்கும் படங்களுக்குக் கூட புரமோஷன்களுக்கு வரமாட்டார். நேற்று சென்னையில் நடந்த ‘ஜவான்’ நிகழ்வில் கூட நயன்தாரா கலந்து கொள்ளவில்லை. கேரளாவில் குடும்பத்தினருடன் ஓணம் கொண்டாடியதால் அவரால் வர முடியவில்லை என்று இயக்குனர் அட்லீ தெரிவித்திருந்தார்.

இதுவரையில் எந்த ஒரு சமூக வலைத்தளங்களிலும் இல்லாத நயன்தாரா தற்போது இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிகாரப்பூர்வ கணக்கை ஆரம்பித்து அறிமுகமாகியுள்ளார். தனது முதல் பதிவாக தனது இரட்டைக் குழந்தைகளான உயிர், உலக் ஆகியோருடன் இருக்கும் வீடியோவைப் பதிவிட்டுள்ளார். ‘ஜெயிலர்’ படப் பாடலுடன் இடம் பெற்றுள்ள அந்தப் பதிவில், “நான் வந்துட்டேன்னு சொல்லு….’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

நயன்தாராவின் இந்த திடீர் மாற்றம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. விரைவில் அதிக பாலோயர்களை நயன்தாரா பெறுவார் என எதிர்பார்க்கலாம்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....