மாடு மேய்க்கச் சென்ற நபரொருவர் மரணம்

Date:

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓமனியாமடு பிரதேசத்தில் மாட்டுபட்டி பகுதியில் மாடு மேய்க்க சென்ற ஆண் ஒருவர் இன்று (05) உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை கிண்ணியடி விஷ்னுகோவில் வீதியைச் சேர்ந்த 49 வயதுடைய கந்தையா மாமாங்கம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஓமனியா பகுதியிலுள்ள அமைக்கப்பட்டிருக்கும் மாட்டுபட்டிக்கு மாடுகளை மேய்பதற்காக குறித்த நபர் வழமைபோல சம்பவ தினமான நேற்று வீட்டில் இருந்து சென்றவர் இன்று காலையாகியும் வீடு திரும்பாததையடுத்து மாட்டுபட்டியின் உரிமையாளர் அந்த பகுதிக்கு சென்று அவரை தேடியபோது மாட்டுபட்டிக்கு அருகிலுள்ள பகுதியில் உயிரிழந்த நிலையல் சடலமாக கிடப்பதை கண்டு பொலிசாருக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிசார் மற்றும் தடயவியல் பிரிவு பொலிசார் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வந்ததுடன் சடலத்தை, பிரேத பரிசோதனைக்காக நீதிமன்ற உத்தரவை பெற்று வைத்தியசாலையில் ஓப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....