ஒருநாள் போட்டிகளில் புதிய சாதனை படைத்த இலங்கை

Date:

ஆசிய தொடரின் நேற்றைய போட்டியில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 291 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 37.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளது. அதாவது ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக 12 போட்டிகளில் வெற்றி பெற்று பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணியின் சாதனையை சமன் செய்துள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி இதனை இருமுறை செய்துள்ளது. பாகிஸ்தான் ஒருமுறை மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளது.

இலங்கை அணி முதன் முறையாக இந்த சாதனையை பதிவு செய்துள்ளது. இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக 21 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது.

இலங்கை அணி செப்டம்பர் 9-ம் திகதி வங்காளதேசம் அணியை எதிர்கொள்கிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....