திரிபோஷா வழங்குவதில் பாரிய குறைபாடு காணப்படுவதாகவும், சிறு பிள்ளைகள், பாலூட்டும் தாய்மார்கள்,கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கூட முறையான திரிபோஷா வழங்கப்படுவதில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (7) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
திரிபோஷ தொழிற்சாலையையும் தனியார் மயமாக்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக அறியக்கிடைப்பதாகவும், இவ்வாறு தனியார்மயமாக்காது திரிபோஷவை உரிய முறையில் வழங்குவது எந்தவொரு அரசாங்கத்தின் தேசியப் பொறுப்பு என்பதனால் அதனை முறையாக வழங்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கோரிக்கை விடுத்தார்.




