‘அட எம்மா ஏய்’ பிரபல நடிகர் மாரிமுத்து காலமானார்

Date:

தொலைக்காட்சி தொடர்களில் கலக்கி வரும் பிரபல நடிகரான மாரிமுத்து ‘எதிர் நீச்சல்’ என்ற தொடர் மூலம் மிகவும் பிரபலமானார். இதில் இவர் பேசும் ‘அட எம்மா ஏய்’ வசனம் பட்டி தொட்டி எங்கும் பரவியுள்ளது. இவர் இயக்குனர் வசந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர் இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு ‘கண்ணும் கண்ணும்’ 2014-ஆம் ஆண்டு ‘புலிவால்’ உள்ளிட்ட 2 படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களும் கைக்கொடுக்காததையடுத்து நடிகராக களமிறங்கினார்.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘யுத்தம்’ செய் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பாராட்டை பெற்றது.

இந்நிலையில், நடிகர் மாரிமுத்து (58) இன்று காலை மாரடைப்பால் காலமானார். அதாவது, ‘எதிர் நீச்சல்’ தொடரின் டப்பிங் பேசிக்கொண்டிருந்த திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார். இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, நெஞ்சுவலி காரணமாக இறந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு பிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் மாரிமுத்துவின் உடல் இன்று மாலை வரை சென்னையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இன்று இரவு அவரது சொந்த ஊரான மதுரை, தேனி மாவட்டம் வருச நாட்டுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. அங்கு இவரது இறுதி சடங்குகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....