தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அவுஸ்திரேலியா அபார வெற்றி

Date:

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட T20 மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது.

இவ்விரு அணிகளுக்கு இடையே நடந்த T20 தொடரை அவுஸ்திரேலிய அணி 3-0 என முழுமையாக கைப்பற்றி தென் ஆப்பிரிக்காவை

வீழ்த்தியது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பாடிய தென் ஆப்பிரிக்கா 49 ஒவரில் 222 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது.

அணித்தலைவர் பவுமா 142 பந்தில் 114 ஓட்டங்கள் எடுத்தார். மார்கோ ஜான்சன் 32 ஓட்டங்கள் எடுத்தார்.

அவுஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும், ஸ்டோய்னிஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 223 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அவுஸ்திரேலியா களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர். டிராவிஸ் ஹெட் 33 ஓட்டங்கள் எடுத்தார்.

அவுஸ்திரேலிய அணி 113 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்களை இழந்து தடுமாறியது. 8-வது விக்கெட்டுக்கு மார்னஸ் லபுசேன், ஆஷ்டன் அகார் ஜோடி சேர்ந்தனர். தனி ஆளாகப் போராடிய லபுசேன் அரை சதம் பதிவு செய்தார்.

தொடர்ந்து ஓட்டங்கள் குவித்த இந்த ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. இறுதியில், அவுஸ்திரேலியா 40.2 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 225 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

லபுசேன் 80 ஓட்டம் ஆஷ்டன் அகார் 48 ஓட்டமும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா, கோட்சி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....