பாகிஸ்தான் அணிக்கு இமாலய வெற்றி இலக்கு நிர்ணயம்!

Date:

2023 ஆசிய கிண்ணத் தொடரில் தற்போது இடம்பெற்றுவரும் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு 357 என்ற வெற்றி இலக்கை இந்திய அணி நிர்ணயித்துள்ளது.

நேற்றைய தினம் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட இந்திய அணிக்கு அழைப்பு விடுத்தது.
அதன்படி,  முதலில் இந்திய அணி துடுப்பெடுத்தாடிய நிலையில், 2 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மழை காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டது.
மழை தொடர்ந்ததால் போட்டி இன்றைய தினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.
அதன்படி, இன்று மாலை 4.40 மணியளவில் போட்டி ஆரம்பமானது.
இரண்டு விக்கெட்டுக்களை இழந்த நிலையில் களமிறங்கிய இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்களான விராட் கோஹ்லி மற்றும் கே.எல் ராஹுல் ஆட்டமிழக்காமல் சதங்களை விளாசியிருந்தனர்.
அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 356 ஓட்டங்களைப் பெற்றது.
ஆட்டமிழக்காமல் அதிரடி துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட கோஹ்லி மற்றும் ராஹுல் தலா 122 மற்றும் 111 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் சஹீன் அப்ரிடி மற்றும் நசீம் ஹா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....