4 பேருக்கு மரண தண்டனை!

Date:

கூரிய ஆயுதங்களால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மேல் நீதிமன்றத்தினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

1996 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02 ஆம் திகதி களுத்துறை, மதினகந்த பிரதேசத்தில் ஒருவரைக் கொலை செய்து மற்றுமொருவரைப் படுகாயப்படுத்தியமை தொடர்பில் 07 சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் களுத்துறை மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 1, 2, 3 மற்றும் 5 ஆவது பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 6 மற்றும் 7 ஆவது பிரதிவாதிகளை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்தும் மேல்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

அந்த வழக்கின் நான்காவது பிரதிவாதி இறந்துவிட்டதாக மேல் நீதிமன்றத்தில் தெரியவந்தது.

நீண்ட வழக்கு விசாரணை நடந்த இந்த வழக்கில் 14 சாட்சிகளிடம் சாட்சியம் பெறப்பட்டுள்ளது.

நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் களுத்துறை மேல் நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கு மரண தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....