கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் வெட்டு காயங்களுடன் சடலம் மீட்பு

Date:

ரத்கம, கிரிமெடிய தகன மேடைக்கு பின்னால் உள்ள கலப்பு பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக ரத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

ரத்கம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி, குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த நபர் அதே பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

 

உயிரிழந்தவரின் கை, கால்கள் கட்டப்பட்டுள்ளதாகவும், உடலில் பல இடங்களில் காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

உயிரிழந்தவர் சுமார் 27 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

 

குறித்த நபர் கடந்த 17ஆம் திகதி மாலை பெணிவத்தை கட்டுதம்பே பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் நண்பர்கள் குழுவுடன் மது அருந்தியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

 

பின்னர் அவர் அந்த இடத்தை விட்டு வெளியேறியதும் தெரியவந்துள்ளது.

 

அதன்படி நேற்று (18) மாலை அவரது சடலம் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....