ஓய்வின் பின் பணிக்கு திரும்பிய வைத்தியர்களுக்கு கொடுப்பனவு ???

Date:

ஓய்வு பெற்ற பின்னர் பணிபுரியும் வைத்தியர்களுக்கு இதுவரை கொடுப்பனவோ சம்பளமோ வழங்கப்படவில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சுகாதாரத் துறையில் மருத்துவர்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மருத்துவர்களின் ஓய்வு வயதை சுகாதார அமைச்சு 63 ஆக அதிகரித்திருந்தது.

 

இருப்பினும், ஓய்வுபெற்ற வைத்தியர்களின் விருப்பத்திற்கிணங்க மேலும் 02 வருடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்தது.

 

இதன்படி, சுகாதார அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க இவ்வருடம் ஓய்வு பெறவிருந்த 60 விசேட வைத்தியர்களில் 53 பேர் ஓய்வுபெற்றுள்ளதுடன், 07 பேர் பணிக்குத் திரும்பியுள்ளனர்.

 

இந்த 07 விசேட வைத்தியர்களுக்கு சம்பளம் அல்லது ஓய்வூதியம் வழங்குவதற்கு சுகாதார அமைச்சு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இந்த 07 மருத்துவர்களில் இரத்தமாற்று நிபுணர்கள், சத்திரசிகிச்சை நிபுணர், மகப்பேறு மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் அடங்குகின்றனர்.

 

ஓய்வு பெற்ற பின்னர் மீண்டும் பணிக்கு வருகை தந்த ஹோமாகம வைத்தியசாலையின் சிரேஷ்ட விசேட சத்திரசிகிச்சை நிபுணர் தம்மிக்க விக்கிரமசேகர கருத்து தெரிவிக்கையில் ஓய்வுபெற்ற பின்னர் பணிக்கு வருகை தந்தும் தமக்கான கொடுப்பனவு வழங்காததால் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவித்தார்.

 

இது தொடர்பாக, சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா கருத்து தெரிவிக்கையில், இப்பிரச்சினை தொடர்பில் அரச சேவைகள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்ட போதிலும் இதுவரை உரிய தீர்வுகள் வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.   வரலாறு காணாத விலைவாசி...

இருத நோய் உயிரிழப்பு அதிகரிப்பு !

இதய நோய்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக...

6 காட்டு யானைகள் பலி!

நேற்றிரவு நாட்டின் இரு வேறு பிரதேசங்களில் ரயிலில் மோதுண்டு 06 காட்டு...

தனுஷ்கவுக்கு மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு?

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது...