பூட்டிய வீட்டிற்குள் பயங்கரம் அதிர்ச்சியில் அயல் வாசிகள்

Date:

அமெரிக்காவின் சிகாகோ நகரில், பூட்டிய வீட்டிற்குள் ஒரு தம்பதி, அவர்களின் இரண்டு குழந்தைகள், அவர்கள் வளர்த்த மூன்று நாய்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில், பிணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர்கள் ஒருநாள் முழுவதும் வீட்டில் இருந்து வெளியே வராததாலும், வீடு பூட்டியே கிடந்ததாலும் அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து சிகாகோ போலீசார் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, வீட்டுக்கதவை உடைத்து பார்த்தபோது துப்பாக்கி குண்டு பாய்ந்த இறந்து கிடந்தது தெரியவந்தது. அந்த தம்பதி தங்களது குழந்தைகள், வளர்த்த நாய்களை சுட்டுக்கொலை செய்து, தாங்களும் தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது கொலை செய்யப்பட்டனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்தவர்கள் ஆல்பர்ட்டோ ரோலன், ஜோரைடா பார்டோலோமெய், அவர்களின் குழந்தைகள் ஆட்ரியல் (10 வயது), டியாகோ (7) எனத் தெரியவந்துள்ளது.

போலீஸ் அதிகாரி ஒருவர், ”சம்பவம் நடைபெற்ற இடத்தில் சந்தேக்திற்குரிய வகையில் யாரும் தங்கியதாகவும், நடமாடியதாகவும் எந்த தகவலும் கிடைக்கவில்லை, எங்களுடைய புலனாய்வுத்துறை அதிகாரிகள் தடயங்களை ஆராய்ந்து வருகிறார்கள்” என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....