21 வயது இளம்பெண்ணின் நிர்வாண வீடியோ Facebook -ல் பதிவேற்றம்

Date:

இந்தியாவில் குஜராத்தில் 21 வயது இளம்பெண்ணின் சித்தரிக்கப்பட்ட நிர்வாண வீடியோ பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம், சூரத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் பாண்டேசரா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அவர் அந்த புகாரில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஷிவ்குமார் மவுரியா என்ற இளைஞர் தன்னுடைய சித்தரிக்கப்பட்ட நிர்வாண வீடியோ மற்றும் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார்.

மேலும், நிர்வாணமாக வீடியோ காட்டாவிட்டால் தனது தந்தையை கொன்று விடுவதாக மிரட்டியுள்ளதாக புகாரில் கூறியுள்ளார்.

இது குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், பேஸ்புக்கில் மவுரியா வீட்டின் அருகே வசிக்கும் இளம் பெண் ஒருவர் நிறுவனத்தில் வேலை புரிவது தெரியவந்தது.

கடந்த ஆண்டு முதல் மவுரியா அந்த இளம்பெண்ணுடன் நட்புடன் பழகி வந்துள்ளார். இருவரும் தங்கள் தொலைபேசி எண்களை பரிமாறிக்கொண்டு அடிக்கடி போன் செய்தும், வாட்ஸ் அப்பிலும் பேசியுள்ளனர்.

அப்போது, தனது ஆசைக்கு இணங்குமாறு மவுரியா அந்த பெண்ணை மிரட்டியுள்ளார். ஆனால், இதனை இளம்பெண் மறுத்துள்ளார். பின்பு, அந்த இளம்பெண்ணின் பெயரில் மவுரியா பேஸ்புக் கணக்கை தொடங்கி அதில் அவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்த புகைப்படங்களை அகற்ற வேண்டும் என்றால், உடல் முழுவதையும் நிர்வாணமாக வீடியோவில் காட்ட வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.

இதன் மூலம், சித்தரிக்கப்பட்ட அந்த இளம்பெண்ணின் நிர்வாண வீடியோவை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்ததும், இளம்பெண் வேலை செய்யும் இடத்திற்குச் சென்று மவுரியா தாக்கியதும் தெரியவந்துள்ளது.

மேலும், மவுரியா மீது வழக்குப்பதிவு செய்து பொலிசார் அவரை தேடி வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....