ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான 28 வாகனங்களுக்கு காப்புறுதி இல்லை

Date:

ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான 28 வாகனங்களுக்கு காப்புறுதி செய்யப்படவில்லை என அண்மைய கணக்காய்வு அறிக்கை மூலம் வெளிப்படுத்தியுள்ளது.

 

காப்புறுதி செய்யப்படாத 28 வாகனங்களில் 13 வாகனங்கள் அதியுயர் பாதுகாப்பு வாகனங்கள் எனவும், ஒரு வாகனத்தின் பெறுமதி 25 முதல் 30 கோடி ரூபா எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேலும் உயர் காப்பீட்டு வாகனங்களின் அதிக மதிப்பு காரணமாக, காப்பீட்டுக்காக ஒவ்வொரு வாகனத்திற்கும் ஆண்டுக்கு இரண்டு கோடி ரூபா வரி செலுத்த வேண்டும்.

 

எனவே குறித்த வாகனங்களை அதிக செலவுக்கு காப்புறுதி செய்யப்படவில்லை என ஜனாதிபதி செயலக கணக்கு அதிகாரி கணக்காய்வாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளார்.

 

நாட்டில் தற்போதுள்ள சட்டங்களை பின்பற்றப்படாவிடின் அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மாற்றுக் கொள்கை முடிவுகளை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும், ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....