திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருமலை – நிலாவெளி பிரதான வீதியின் ஆனந்தபுரி பகுதியில் இன்று புதன்கிழமை (20) காலை பிரபல மலர்சாலையின் வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீதியில் சென்று கொண்டிருந்த ஒருவர் மீது அவ்வீதியால் பயணித்த மலர்சாலை வாகனம் ஒன்று மோதியதில் குறித்த நபர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தில் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 78 வயதான ஆறுமுகம் பழனியாண்டி என்ற நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.




