அர்த்தமற்ற செயல்களுக்கு விளக்கமளிப்பது வேதனையாகவுள்ளது- சாய் பல்லவி

Date:

மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் சாய் பல்லவி. அதன்பின்னர் விஜய் இயக்கத்தில் வெளியான ‘தியா’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

பின்னர் ‘மாரி 2’, ‘என்.ஜி.கே’, ‘கார்க்கி’ என பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் பூஜையின் போது நடிகை சாய்பல்லவியும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியும் கழுத்தில் மாலையுடன் இருக்கும் புகைப்படத்தை கிராப் செய்த சிலர் இவர்களுக்கு ரகசிய திருமணம் நடைபெற்றுவிட்டதாக வதந்தியை பரப்பி வருகின்றனர்.

 

இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சாய் பல்லவி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “நான் வதந்திகளை கண்டுகொள்வது இல்லை, ஆனால் குடும்பத்தை போன்று இருக்கும் நண்பர்களை குறித்து வதந்திகள் பரவும் போது அதை பற்றி நான் பேச வேண்டும். என் படப்பிடிப்பு பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வேண்டுமென்றே கிராப் செய்து காசுக்காகவும் அருவருப்பான நோக்கத்துடனும் பரப்பி வருகின்றனர். என் அடுத்தடுத்த படம் குறித்த மகிழ்ச்சியான தகவல்களை வெளியிடலாம் என்கிறபோது இது போன்ற அர்த்தமற்ற செயல்களுக்கு விளக்கமளிப்பது வேதனையாகவுள்ளது” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....