வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

Date:

வவுனியா, ஏ9 வீதி, பறண்நட்டகல் சந்தியில் நேற்று (22) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

குறித்த விபத்து ஓமந்தையில் வெதுப்பகம் நடத்தி வரும் சிவசேகரம் தினேசன் என்பவர் வவுனியாவில் இருந்து ஓமந்தைக்கு தனது மோட்டார் சைக்கிளில் செல்லும் போது, பறண்நட்டகல் சந்தியில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தியிருந்த பஸ்சை முந்தி செல்ல முற்பட்ட போது எதிர் திசையில் இருந்து வந்த பட்டா ரக வாகனம் ஒன்று மோதியதில் ஏற்பட்டுள்ளது.

 

இதன் போது மோட்டார் சைக்கிளில் சென்ற சி.தினேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அவரது சடலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

 

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....