கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.. வெள்ளை மாளிகை தகவல்

Date:

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா மற்றும் வருடாந்திர தடுப்பூசியை செலுத்திக் கொண்டார் என்று வெள்ளை மாளிகை அறிவித்து இருக்கிறது. வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ மருத்துவரான கெவின் ஒ கானர், இது தொடர்பான தகவலை அறிக்கை வாயிலாக உறுதிப்படுத்தினார்.

“குளிர்காலம் மற்றும் சளி, காய்ச்சல் காலம் துவங்க இருக்கும் நிலையில், அதிபர் அனைத்து அமெரிக்கர்களையும் தன்னை உதாரணமாக எடுத்துக் கொண்டு, பொது மக்கள் அவர்களது மருத்துவரை தொடர்பு கொண்டு தடுப்பு மருந்தை செலுத்திக் கொள்ள அறிவுறுத்தி இருக்கிறார்,” என்று மருத்துவர் கெவின் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்.

நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் இம்மாத துவக்கத்தில், புதிய வகை கொரோனா தடுப்பூசியை ஆறு மாத குழந்தைகள் துவங்கி அனைவரும் செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்து இருந்தது. கொரோனா பெருந்தொற்றின் தீவிரம் குறைந்து இருக்கலாம், ஆனால் அமெரிக்காவில் இன்றும் ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்கும் நிலை உள்ளது.

ஏற்கனவே செலுத்தப்பட்ட தடுப்பூசியின் தீவிரம், பலருக்கும் குறைந்து வருவதாக மருத்துவ வல்லுனர்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர். இதன் காரணமாக புதிய தடுப்பு மருந்து பலரின் உயிரை காக்கும் என்று அவர்கள் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் தான் ஜில் பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனினும், அவருக்கு தொற்றின் தீவிரம் குறைவாகவே இருந்தது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....