பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்ட இளம் 24 ஜோடிகள் சுற்றிவளைப்பு

Date:

தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான தோட்டத்தில், சிறிய ​அறைகளில் வயது குறைந்தவர்கள் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக கிடைத்த முறைபாடுகளுக்கு அமைய அவ்விடத்தை பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை (24) சுற்றிவளைத்து தேடுதல் மேற்கொண்டதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.

 

இதன்போது குறித்த சுற்றிவளைப்பில், சிறிய அறைகளில் இருந்த 24 ஜோடிகளை இருந்ததாகவும். இன்னும் பல ஜோடிகள் இருப்பதாக கண்டறிந்ததை அடுது்து, அந்த ஜோடிகளை அழைத்து, அவர்களுக்கு நிலைமையை விளக்கி, ஆலோசனைகளை வழங்கியதன் பின்னர், சிறுமிகளின் பெற்றோர்களுக்கு தொலைபேசியூடாக அழைப்பை ஏற்படுத்தி, நிலைமையை எடுத்துக்கூறி விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

தங்களுடைய குழந்தைகளுடன் அந்த பூங்காவுக்கு செல்லும் போது, பாடசாலைகளுக்குச் செல்லும் வயதை ஒத்தவர்கள் அந்த தோட்டத்தில் மறைக்கப்பட்டிருக்கும் சிறிய அறையகளில், பாலியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும், இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும், பிரதேசத்தைச் சேர்ந்த பெற்றோர்கள், மதத்தலைவர்கள் மற்றும் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட முறைப்பாடுகளுக்கு அமைய, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல் கட்டளையின் பிரகாரம் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....