பொலிஸாரை தாக்கிய பாடசாலை மாணவர்கள்

Date:

கல்கிஸ்ஸை பகுதியில் இரண்டு பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய ஐந்து பாடசாலை மாணவர்கள் உட்பட ஆறு பேரை கைது செய்ததாக கல்கிஸ்ஸை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

பாறைகள் நிறைந்த கடலோரக் பகுதியில் குடிபோதையில் சிலர் பாதுகாப்பற்ற முறையில் நீராடுவதாக கல்கிஸ்ஸை பொலிஸ் கரையோரப் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிசார் கூறுகையில், அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்ததில், பாதுகாப்பற்ற இடத்தில் 6 பேர் குளிததுக்கொண்டிருந்தமை தெரியவந்தது.

 

அந்த இடம் குளிப்பதற்கு பாதுகாப்பற்றது என எச்சரித்து மக்களை அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து, குறித்த குழுவினர் பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கி வன்முறையில் ஈடுபட்டதுடன், நிலைமையை கட்டுப்படுத்த அதிகாரிகள் சென்ற போது, ​​குறித்த குழுவினர் பொலிஸாரை தாக்கியுள்ளனர்.

 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 16 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட ரத்மலானை மற்றும் பிலியந்தலை அஹுங்கல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....