19 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

Date:

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்தது.

தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா 46 ரன்னும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 42 ரன்னும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் நிலைத்து நிற்கவில்லை. இலங்கை அணி சார்பில் பிரபோதினி, சுகந்திகா குமாரி, ரனவீரா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. இலங்கை அணி சார்பில் களமிறங்கிய சமாரி மற்றும் அனுஷ்கா முறையே 12 மற்றும் 1 ரன்களில் பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த விஷ்மியும் ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றினார். பிறகு வந்த ஹாசினி மற்றும் நிலாக்ஷி முறையே 25 மற்றும் 23 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்தடுத்து வந்தவர்கள் அதிக ரன்களை எடுக்காத நிலையில், இலங்கை அணி தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்தது. அதன்படி 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 8 விக்கெட்களை இழந்து வெறும் 97 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய டிடாஸ் சத்து மூன்று விக்கெட்களை கைப்பற்றினார்.

ராஜேஷ்வரி கெய்க்வாட் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். தீப்தி ஷர்மா, பூஜா வஸ்ட்ரக்கர் மற்றும் தேவிகா வைத்யா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி இறுதி போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தி இருப்பதை அடுத்து, இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....