வர்த்தக நிலையமொன்றில் ஆயுதத்தைக்காட்டி அச்சுறுத்தி 7 மில்லியன் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கலகெதரவில் உள்ள தளபாட விற்பனை நிலையமொன்றில் ஆயுதங்களுடன் வந்த இருவர் இன்று மாலை ஊழியர்களை அச்சுறுத்தி குறித்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.