பாகிஸ்தானில் ரயில் விபத்து !

Date:

பாகிஸ்தானில் சரக்கு ரயில் மீது, பயணிகள் ரயில் மோதியதில் நேற்று (24) விபத்து இடம்பெற்றுள்ளது.

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மியான்வாரி நகரில் இருந்து, லாகூர் நோக்கி பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது.

குறித்த ரயில் ஷெய்குபுரா மாவட்டத்தின் கியூலா சத்தார் ஷா ரயில் நிலையம் அருகே சென்றபோது, அதே தண்டவாளத்தில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருப்பதை பார்த்த பயணிகள் ரயில் சாரதி அதிர்ச்சியடைந்தார்.

கடைசி நேரத்தில் ரயிலை நிறுத்த முயன்றும் முடியாத நிலையில், சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 31 பயணிகள் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்தில் காயமடைந்தவர்களை மீட்பு படையினர் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்த ரயில் விபத்து குறித்து விசாரணை நடத்த குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....