2000 ரூபா தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

Date:

பொது மக்கள் தம்வசம் வைத்திருக்கும் ரூ.2000 ரூபாய் இந்திய நாணயத்தாள்களை இந்திய வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளும் இறுதித் திகதி செப்டெம்பர் 30 ஆம் திகதி என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாவனையிலிருந்த ரூ. 6.73 இலட்ச கோடி ரூபாய்கள் பெறுமதி வாய்ந்த 2000 ரூபாய் நாணய புழக்கம், 2023 மார்ச் மாதத்தில் ரூ. 3.62 இலட்ச கோடி ரூபாயாக குறைவடைந்துள்ளதாக அறிவித்திருந்த இந்திய ரிசர்வ் வங்கி, நாட்டில் புழக்கத்திலுள்ள ஏனைய நாணயத்தாள்கள் பொது மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள போதுமானதாக அமைந்திருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த 2000 ரூபாய் நாணயத்தாளை மீளப் பெறுவது தொடர்பான அறிவித்தல் வெளியாகி முதல் 20 நாட்களுக்குள் புழக்கத்திலிருந்த சுமார் 50சதவீதமான நாணயத்தாள்கள் வங்கிகளுக்கு கிடைத்திருந்ததாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

செப்டெம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னதாக, இந்தியா முழுவதிலும் காணப்படும் 19 ரிசர்வ் வங்கி கிளைகள் மற்றும் எந்தவொரு வங்கிக் கிளைகளிலும் இந்திய 2000 ரூபாய் தாள்களை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....