இம்ரான்கானை வேறு சிறைக்கு மாற்ற கோர்ட்டு உத்தரவு

Date:

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 70) மீது ஊழல் குற்றச்சாட்டு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் தோஷகானா ஊழல் வழக்கில் கடந்த மாதம் 5-திகதி அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனவே பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டாக் சிறையில் அவர் சிறைதண்டனை அனுபவித்து வருகிறார்.

இதனையடுத்து அவரது உடல்நலம், சமூக மற்றும் அரசியல் நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஏ-வகுப்பு வசதிகள் கொண்ட சிறைக்கு மாற்றும்படி இம்ரான்கான் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதுகுறித்த வழக்கு விசாரணை இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் அவரை ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைக்கு மாற்றுவதற்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....