பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

Date:

பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

 

வரலாறு காணாத விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பெட்ரோல் விலையேற்றம் மற்றும் மின்சார தட்டுப்பாடு ஆகியவற்றால் அங்கு வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விட்டது.

 

சொந்த நாட்டில் பிழைக்க வழியில்லாததால் பலர் அங்கு பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக அந்த பாகிஸ்தானிய பிச்சைக்காரர்கள் கும்பல் கும்பலாக ஈராக், சவுதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளில் சட்டவிரோதமாகவும் சட்டரீதியாகவும் உள்ளே நுழைந்து அங்கேயும் பிச்சை எடுப்பதில் ஈடுபட்டுள்ளனர்.

 

அரபு நாடுகள் பலவற்றில் பிச்சை எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. பிச்சை எடுப்பவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பிச்சைக்காரர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் என ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

 

பாகிஸ்தானிலிருந்து அந்நாடுகளுக்கு செல்லும் விமானங்களில் பிச்சைக்காரர்களே அதிகம் பயணம் செய்கின்றனர்.

 

இவர்களின் வருகையை தடுக்க நடவடிக்கை எடுக்க சவுதி அரேபியாவும், ஈராக்கும் பாகிஸ்தானிடம் கோரிக்கைகளை முன் வைத்துள்ளன.

 

ஒரு காலத்தில் பயங்கரவாதிகளை ஏற்றுமதி செய்து வந்த பாகிஸ்தான், தற்போது பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்வதாக சமூக வலைதளங்களில் பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....