நான் உன்னுடன் இருக்கிறேன், உன்னை நம்புகிறேன்! ; பத்திரனவுக்கு மலிங்க சொன்ன விடயம்

Date:

இலங்கை அணியின் இளம் வீரர் மதீஷ பத்திரனவுக்கு ஜாம்பவான் மலிங்க ஆதரவு தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணியில் விளையாடி வரும் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன.

ஜூனியர் மலிங்க என்று அழைக்கப்படும் மலிங்க ஐ.பி.எல் தொடரில் மிரட்டலான பந்துவீச்சை காட்டினார். ஆனால் உலகக்கோப்பை தொடரில் இதுவரை விளையாடியுள்ள 2 போட்டிகளிலும் பத்திரன சொதப்பியுள்ளார்.

மொத்தம் 19 ஓவர்கள் வீசியுள்ள அவர் 185 ஓட்டங்களை விட்டுக்கொடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக உதிரி ரன்களை (Extra) வாரி வழங்கியுள்ளார்.

இதன்மூலம் அதிக உதிரி ரன்கள் (71) கொடுத்த மோசமான பந்துவீச்சாளராக மாறியுள்ளார். இதனால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் இலங்கை ஜாம்பவான் லசித் மலிங்க தனது ஆதரவினை பத்திரனவுக்கு தெரிவித்துள்ளார்.

அவர் தனது பதிவில், ‘நான் உன்னுடன் இருக்கிறேன் மதீஷ. மேலும் நான் உன்னை நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....