# Tags
#இலங்கை

நண்பனுடன் சென்ற இளைஞன் பலி

நண்பர் ஒருவருடன் நானுஓயா டெஸ்போட் கால்வாயில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நானுஓயா டெஸ்போட் தோட்டத்தின் மேல் பகுதியைச் சேர்ந்த மகதேவன் சதீஷ்குமார் என்ற 18 வயதுடைய இளைஞனே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கொழும்பு பகுதியில் தொழில் செய்து வந்த உயிரிழந்த இளைஞன், நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று அவருடன் டெஸ்போட் கால்வாயில் பிற்பகல் 1 மணியளவில் நீராடச் சென்றுள்ளார்.

நீராடச் சென்ற இளைஞன் திடீரென கால்வாயில் மூழ்கி காணாமல் போயுள்ளதுடன், இளைஞனைக் காணாததால், நுவரெலியா பொலிஸ் பிரிவின் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டது.

பின்னர், அதிகாரிகள் வந்து கால்வாயில் சுமார் 10 அடி ஆழத்தில் இருந்து இளைஞரின் சடலத்தை மீட்டனர்.

சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *