72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது விஜயகாந்த் உடல்

Date:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது உடல் தீவுத்திடலில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று வைக்கப்பட்டது.

தீவுத்திடலில் இருந்து விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டுள்ள வாகனம் மக்கள் வெள்ளத்தில் கோயம்பேடு நோக்கி சென்றது. கேப்டன் விஜயகாந்தின் உடலை சுமந்து செல்லும் வாகனத்துடன் தொண்டர்களும் ரசிகர்களும் ஓடோடி வந்தனர்.

திரையுலகினர், பொதுமக்கள் என அலைகடலென திரண்டு வழிநெடுகிலும் விஜயகாந்திற்கு பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் இறுதிச்சடங்கு நடைபெற்றது. அவரது

உடலுக்கு 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டது. இதனையடுத்து, விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறுதிச்சடங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர்கள், திரையுலகினர் உள்பட பலரும் பங்கேற்றனர்.

விஜயகாந்தின் இறுதிச்சடங்கை பொதுமக்கள் காண தே.மு.தி.க. அலுவலகத்தின் முன் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....